Monday, November 18, 2013

ஹதீஸ்களுடன் ஆரம்பம்


அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் கூறினார்கள்:


உங்களில் ஒருவருக்கு அவருடைய தந்தை, அவருடைய பிள்ளை, ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் இறைநம்பிக்கை (ஈமான்) கொண்டவர் ஆக மாட்டார். 

அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹீஹுல் புகாரி - 15

நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்கள் (நோன்பு திறக்காமல்) தொடர் நோன்பு நோற்றார்கள். மக்களும் அவ்வாறு தொடர் நோன்பு நோற்றார்கள். இது மக்களுக்குச் சிரமமாக இருந்தது. அப்போது நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்கள் மக்கள் தொடர் நோன்பு நோற்கத் தடை விதித்தார்கள். நபித்தோழர்கள் நீங்கள் (மட்டும்) தொடர் நோன்பு நோற்கிறீர்களே! என்று கேட்டார்கள். நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்கள், நான் உங்களைப் போன்றவன் அல்லன் (இறைவன் தரப்பிலிருந்து) உண்ணவும் பருகவும் எனக்கு வழங்கப்படுகிறது!


அப்துல்லாஹ் பின் உமர் (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹீஹுல் புகாரி - 1922

நபி (ஸல்லலாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் தண்ணீர் பாத்திரத்தைக் கொண்டு வரக் கூறியபோது தண்ணீருடன் வாய் விசாலமான ஒரு பாத்திரம் கொண்டு வரப்பட்டது. அதில் நபி (ஸல்லலாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் தங்களின் விரல்களை வைத்தபோது அவர்களின் விரல்களுக்கிடையிலிருந்து நீர் ஊற்று சுரப்பதை பார்த்தேன். அதிலிருந்து எழுபதிலிருந்து எண்பது பேர் வரை உளூச் செய்ததை நான் கணக்கிட்டேன்"


அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹிஹுல் புகாரி - 200